மூக்குத்தி அம்மன்
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி-என் ஜே சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்தை தொடர்ந்து “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்க, வேல்ஸ் இன்டெர்நெசனல் ஐசரி கணேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

100 கோடி பட்ஜெட்?
இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர் சி, சில ஆண்டுகளுக்கு முன்பு “சங்கமித்ரா” என்ற பிரம்மாண்ட வரலாற்றுப் புனைவு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் டிராப் ஆனது.

அந்த வகையில் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் மிகப் பிரம்மாண்டமான காட்சிகள் இடம்பெறவுள்ளதாம். இது “சங்கமித்ரா” படத்திற்கான ஒரு முன்னோட்டமாக அமையுமாம். இதற்காகத்தான் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்திற்கு ரூ100 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.