சுமாரான வரவேற்பு பெற்ற திரைப்படம்…
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் ஈர்க்கவில்லை. அஜித்குமாரின் கெரியரில் இது ஒரு சுமாரான திரைப்படம் என்றே ரசிகர்கள் இத்திரைப்படத்தை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் மோகன்லால் திரைப்படம் சிக்கலில் சிக்கியுள்ளதாம்.

பணம் இல்லை?
“விடாமுயற்சி” திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம்தான் மோகன்லாலின் “எம்புரான்” திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. எம்புரான் திரைப்படத்தை பிரித்விராஜ் இயக்கி வரும் நிலையில் இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.175 கோடி என கூறப்படுகிறது.

ஏற்கனவே ரூ.100 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள ரூ.75 கோடியை “விடாமுயற்சி” திரைப்படத்தால் வரும் லாபத்தை வைத்து முதலீடு செய்துவிடலாம் என லைகா நிறுவனம் நினைத்ததாம். ஆனால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோர் சம்பளமே வாங்காமல் இத்திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்களாம்.