மோகன்லாலின் எம்புரான்
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகலால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் இதற்கு முன்பு இதே கூட்டணியில் வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.
இதில் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் ஒரு ஆக்சன் பிளாக்ஸ்பஸ்டர் திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் தமிழின் பிரபல Food Reviewer ஆன இர்ஃபான் மோகலாலையும் பிரித்விராஜையும் பேட்டி கண்டிருந்தார். இதில் இர்ஃபானின் கேள்விகளுக்கு மிகவும் நகைச்சுவை தொனியில் பதிலளித்தார் மோகன்லால்.

சார் நிறைய பேரை கொன்றுக்காரு…
தமிழில் எந்த நடிகர் அல்லது நடிகையை பிடிக்கும் என்ற கேள்வியை, “Favourite Tamil Actor or Actress?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் இர்ஃபான். அதற்கு மோகன்லால், வெறுமனே “Actress” என்று பதிலளித்தார்.
“இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திலாவது நடிக்க வாய்ப்பு வந்தபோது No சொல்லியிருக்கிறீர்களா?” என்று கேட்க, அதற்கு மோகன்லால், “இல்லை, எனக்கு தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. ஆதலால் No சொல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை” என நகைச்சுவையாக பதிலளித்தார்.

“திரிஷ்யம் திரைப்படத்தில் நீங்கள் நடித்திருந்தீர்களே. அது போல் உண்மையாக உங்கள் வாழ்க்கையில் எதாவது சம்பவம் நடந்திருக்கிறதா?” என இர்ஃபான் கேட்க, அதற்கு பிரித்விராஜ், “ஆமா, சார் நிறையா பேரை கொன்று புதைச்சிருக்காரு” என்று கூறினார். அதன் பின் “அடுத்த கேள்விக்கு போகலாம்” என இர்ஃபான் கூறியபோது, “இதெல்லாம் Question ஆ?” என்று கேட்டார் மோகன்லால். இவ்வாறு அந்த பேட்டி முழுவதும் கலகலப்பான பேட்டியாக அமைந்தது. இப்பேட்டியை பார்த்த மலையாள ரசிகர்கள், “லாலேட்டனை இப்படி Fun ஆக பார்த்ததே இல்லை” என கம்மெண்ட் செய்து வருகின்றனர்.