சொத்து பிரச்சனை
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் மோகன் பாபுவிற்கும் அவரது மகன் மஞ்சு மனோஜிற்கும் இடையே பல நாட்களாக சொத்து பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. தனது மகன் தன்னை தாக்கிவிட்டதாக மோகன் பாபுவும் தனது தந்தை தன்னை தாக்கிவிட்டதாக மஞ்சு மனோஜும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக திகழ்ந்து வருகிறது.

பத்திரிக்கையாளர்களை விரட்டிய நடிகர்
இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் அமைந்துள்ள மோகன் பாபுவின் வீட்டில் அவருக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜிற்கும் இடையே அமளி துமளி ஏற்பட்ட நிலையில் அது குறித்தான செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்தனர். அந்த சமயத்தில் நடிகர் மோகன் பாபு, செய்தியாளர் ஒருவரின் மைக்கை பிடிங்கி செய்தியாளர்களை அடித்து விரட்ட தொடங்கினார். அவருடன் சேர்ந்து அவரது பாதுகாவலர்களும் செய்தியாளர்களை அடித்து விரட்டினர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வந்தது.
ஆஜராக நோட்டீஸ்
இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர் மோகன் பாபு காவல் நிலையத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மோகன் பாபு செய்தியாளர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்து செய்தியாளர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
#ManchuManoj తో పాటు లోపలకి వెళ్లిన మీడియా ప్రతినిధి పైన #MohanBabu ఆగ్రహం.. pic.twitter.com/kse7kBV2Rw
— Gulte (@GulteOfficial) December 10, 2024