தங்கலான்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த “தங்கலான்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஓரளவு சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தாலும் விமர்சகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விக்ரமிற்கு ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. குறிப்பாக “மினுக்கி மினுக்கி” பாடல் ரசிகர்கள் மத்தியிலும் குறிப்பாக பெண்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

அரை மணி நேரத்தில் கம்போஸ்!

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார், “பா.ரஞ்சித் மிகவும் நல்ல மனிதர். அவர் Team Work-ஐ மிகவும் நம்புபவர். ஒருவரை நம்பிவிட்டால் அவருக்கான முழு சுதந்திரத்தையும் அவர் கொடுப்பார். மினுக்கி மினுக்கி பாடலை பொறுத்தவரை அரை மணி நேரத்தில் அந்த பாடலை கம்போஸ் செய்தோம். அந்த படத்தின் இசை நல்லபடியாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.