நடிகர் திலகம் VS மக்கள் திலகம்
எம்.ஜி.ஆருக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையே வணிக ரீதியாக போட்டி இருந்தாலும் இருவரும் அண்ணன் தம்பியை போல் பழகி வந்தவர்கள். இதில் எம்.ஜி.ஆரின் நடிப்பு வெகுஜன ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. சிவாஜி கணேசனின் நடிப்பும் வெகுஜன ரசிகர்களை ரசிக்க வைத்தாலும் அவரது நடிப்பை ஒரு பக்கம் அதீத நடிப்பு என விமர்சித்தனர்.

இவங்க நடிப்புக்கெல்லாம் வரவேற்பு இருக்காது…
இந்த நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர் ஒரு விழாவில் பேசியபோது, “எதிர்காலத்திலே மிகையான நடிப்பிற்கு அவ்வளவு வரவேற்பு இருக்காது, இயற்கையான நடிப்புக்குத்தான் வரவேற்பு இருக்கும்” என கூறினாராம். அவர் இப்படி பேசியதும், “எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனை குறித்துதான் அவ்வாறு பேசினார்” என பத்திரிக்கைகளில் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனராம்.

அதனை தொடர்ந்து ஒரு நாள் ஒரு பத்திரிக்கையாளர் இது குறித்து எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, “எதிர்காலத்தில் மிகையான நடிப்பிற்கு வரவேற்பு இருக்காது, இயற்கையான நடிப்புக்குத்தான் வரவேற்பு இருக்கும் என நான் கூறியவுடனே ஏன் சிவாஜி கணேசனை நினைவுப் படுத்திக்கொள்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் பார்வையில் சிவாஜி கணேசன் மிகையாக நடிக்கிறாரா? அப்படிப்பட்ட செய்திகளை எழுதுவதன் மூலம் என் மேல் நீங்கள் கறை பூசலாம் என நினைத்தால் நீங்கள்தான் தோற்றுப்போவீர்கள். இப்படி பேசி அற்புதமான கலைஞனான தம்பி கணேசனுடைய திறமையை களங்கப்படுத்தாதீர்கள்” என விளாசித் தள்ளிவிட்டாராம் எம்.ஜி.ஆர்.