பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என பல பட்டங்களுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவராக அமைந்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் வள்ளலாகவே திகழ்ந்தார். ஆதலால்தான் அவரை ஆட்க்கட்டிலில் அமரவைத்து அழகு பார்த்தார்கள் தமிழக மக்கள். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் அளித்த பேட்டியொன்றில் எம்.ஜி.ஆர் தன்னை நக்கல் செய்தது குறித்து ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.

புரட்சித் தலைவரின் Humour Sense…
எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது ஒரு முறை கமல்ஹாசன், “நீங்கள் இப்போது முதல்வராக ஆகிவிட்டீர்கள். அதனால் உங்களுக்கு படம் பார்க்க நேரம் இருக்காது. நான் எதாவது நல்ல படம் நடித்தால் சொல்கிறேன். நீங்கள் வந்து பாருங்கள்” என கூறியுள்ளார்.

அதற்கு எம்.ஜி.ஆர், “ஓ, நல்லா இல்லாத படத்துலலாம் நடிக்கிறியா நீ?” என்று கேலி செய்தாராம். கமல்ஹாசனின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் எம்.ஜி.ஆரின் நகைச்சுவை உணர்வை குறிப்பிட்டு ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.