சிவாஜி VS எம்.ஜி.ஆர்
ரஜினி-கமல், விஜய்-அஜித் என்று எப்படி இரு நடிகர்களிடையே வணிக போட்டி நிலவி வருகிறதோ அதே போல் ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே வணிக ரீதியாக போட்டி நிலவி வந்தது. சிவாஜி கணேசனுடன் ஒப்பிடும்போது எம்.ஜி.ஆர் சீனியர் நடிகர். ஆனாலும் எம்.ஜி.ஆருக்கு நிகராக போட்டி போடும் அளவுக்கு சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் அமைந்தன.

சிவாஜியை நடிக்க வைக்க கூடாது….
தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளராக வலம் வந்தவர் சின்னப்ப தேவர். இவர் எம்.ஜி.ஆரின் மிக நெருங்கிய நண்பரும் கூட. சின்னப்ப தேவர், தேவர் பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்து வந்தார். குறிப்பாக எம்.ஜி.ஆரை வைத்து பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் சின்னப்ப தேவர்.

ஆனால் சின்னப்ப தேவர், சிவாஜி கணேசனை வைத்து ஒரு திரைப்படத்தை கூட தயாரித்ததில்லை. சிவாஜி கணேசனை வைத்து தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் தயாரிக்க கூடாது என எம்.ஜி.ஆர் சின்னப்ப தேவரிடம் சத்தியம் வாங்கியதாகவும் ஒரு தகவல் கூறப்படுவதாக பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது சமீபத்திய வீடியோ ஒன்றில் கூறியிருந்தது இதில் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.