நடிகை மேகா ஆகாஷ்:
சென்னையை பிறந்த ஊராகக் கொண்ட மேகா ஆகாஷ் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் 2017-ல் வெளிவந்த லை என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.

அதை எடுத்த சிம்பு நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக பேட்ட திரைப்படம் வெளியாகி இருந்தது. பேட்டை திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தாலும் மிக முக்கிய கதாபாத்திரமான அந்த கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் நடித்து அசத்தியிருந்தார் .

அதுவே இவருக்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்தது. தொடர்ந்து அவர் தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா, பூமராங், ஒரு பக்கா கதை, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வளர்ந்து வந்தார் .
காதலருடன் திருமணம்:

இதனிடையே தன்னுடைய நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மேகா ஆகாஷ் சில மாதங்களுக்கு முன்ன தான் திருமணம் செய்து கொண்டார். அவரது காதல் கணவரான சாய் விஷ்ணு பிரபல அரசியல்வாதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது .
லேட்டஸ்ட் புகைப்படங்கள்:
மேகா ஆகாஷின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கூட வெளியாகி இருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வரும் மேகா ஆகாஷ் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் எல்லோரும் மேரேஜ் ஆகியும் கூட உங்களுக்கு மின்னும் மேனியின் அழகு இன்னும் குறையவே இல்லை என அவரது வசீகர அழகை ரசித்து தள்ளி இருக்கிறார்கள்.