ஆதியும் நிக்கியும்…
நடிகர் ஆதியும் நிக்கி கல்ராணியும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருவரின் பெற்றோர் சம்மதத்தோடு நடைபெற்ற திருமணம் இது. இவர்கள் காதலிக்கத் தொடங்கியது “மரகத நாணயம்” திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்த சமயத்தில்தான்.

மரகத நாணயம் 2
இந்த நிலையில் “மரகத நாணயம்” படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அத்திரைப்படத்தின் இயக்குனர் ARK சரவணன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணியுடன் இயக்குனர் சரவணன் தென்படுகிறார். இப்புகைப்படத்தில் நிக்கி கல்ராணியின் கையில் “மரகத நாணயம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான Script இருக்கிறது.

“மரகத நாணயம் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று இயக்குனர் சரவணன் இப்புகைப்படத்தை வெளியிட்ட “X” பதிவில் குறிப்பிட்டுள்ளார்.