இயக்குனர் வெற்றிமாறன்:
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டும் இயக்கி இருந்தாலும் வெற்றி இயக்குனராக பார்க்கப்படுபவர் தான் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் .
விடுதலை 2 திரைப்படம்:
காமெடியான நடித்து வந்த சூரி முதன் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த விடுதலை திரைப்படத்தில் தான் ஹீரோவாக நடித்திருந்தார் . இதை அடுத்து முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாக ரிலீசுக்கு தயாராக இருக்கிறது .
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது படுத்து தீவிரமாக நடைபெற்று வருகிறது ஹீரோயின் நடிகை மஞ்சுவாரியார் கலந்து கொள்ளவில்லை அப்போது பட குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றிமாறன் நடிகை மஞ்சுவாரியர் பெயரை குறிப்பிடவே இல்லை பிறகு அவரது உதவியாளர் ஓடி வந்து மஞ்சுவாரியர் எனக்கூறி நினைவுபடுத்த பின்னர் மஞ்சுவாரியருக்கு நன்றி கூறினார்.

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மஞ்சுவாரியர் கலந்து கொள்ளாததால் மஞ்சுவாரியரின் பெயரையே மறந்து விட்டோமே என வெற்றிமாறன் கூறினார். வெறும் மூன்று நாட்கள் தான் அவர்களை நடிக்க கூப்பிட்டோம். அதன் பிறகு அவருடைய கதாபாத்திரமும் பெரிதாகிவிட்டது .
வெற்றிமாறனுக்கு மஞ்சு வாரியர் தான் முக்கியம்…
அசுரன் திரைப்படத்தில் பணியாற்றிய மஞ்சு வாரியார் இந்த திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார் என கூறினார் . இப்படி மறந்த நடிகையின் பெயரை கூட உதவியாளர் சொல்லி நன்றி கூறிய வெற்றிமாறன் தன்னுடைய உதவியாளருக்கு நன்றி கூறவில்லை .
அவரின் பெயரை கூட நினைவு கூறவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவரது அம்மா மனைவி உள்ளிட்டோரை மறக்காமல் நினைவுகூர்ந்து பேசிய வெற்றி மாறன் உதவியாளரை மறந்துவிட்டாரே உதவியாளர்கள் இதுபோன்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் தான் இயக்குனர்கள் தன்னுடைய பெயரை சொல்ல வேண்டும் என அதிகபட்சமாக ஆசைப்படுவார்கள். ஆனால் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்களை உதவியாளர்களை நினைவு கொள்ளாமல் அவர்களை பாராட்டாமல் இருப்பது சரி இல்லை என பிரபல யுடியூபரான வெற்றிமாறனை கண்டித்து பேசியிருக்கிறார்.