டிரெண்ட் செட்டர்
மணிரத்னம் இந்திய சினிமாவின் டிரெண்ட் செட்டர் இயக்குனர்களில் மிக முக்கியமானவர். இவரது திரைக்கதை வடிவமைப்பும் காட்சிப் படிமங்களும் அழகியலும் மிகவும் தனித்துவமானவை.
தனக்கென ஒரு தனி பாணியிலான மேக்கிங்க் ஸ்டைலை உருவாக்கி அதனை வைத்து உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். தற்போது கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோரை வைத்து “தக் லைஃப்” திரைப்படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளிவரவுள்ளது.

இரண்டாவது சிரிப்பிற்கு அர்த்தம்…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், மணிரத்னத்தை குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது மணிரத்னத்தை யாராவது ஒருவர் சந்திக்கும்போது புன்னகைத்து வரவேற்பாராம். அதன் பின் அந்த நபரிடம் பேசும்போது அந்த நபர் மீது அவருக்கு கோபம் ஏற்படும் பட்சத்தில் வெளியே போகச் சொல்ல Get Out என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டாராம். இரண்டாவது முறை புன்னகைப்பாராம். அதனை Get out என்று நாம் புரிந்துகொள்ள வேண்டுமாம்.