டிரெண்ட் செட்டர்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் டிரெண்ட் செட்டர் இயக்குனராக வலம் வருபவர்தான் மணிரத்னம். இவரது திரைக்கதை பாணியும் மேக்கிங் ஸ்டைலும் மிகவும் தனித்துவமானவை. தற்போது கமல்ஹாசன், சிம்பு ஆகியோரை வைத்து “தக் லைஃப்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன், மணிரத்னம் குறித்து ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

டிவி சீரியலை இயக்கிய மணிரத்னம்?
1991 ஆம் ஆண்டு சுஹாசினி மணிரத்னம் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக “பெண்” என்ற 8 எபிசோடுகள் கொண்ட ஒரு Anthology தொடரை இயக்கினாராம். அதில் ஒரு எபிசோட்டில் சுஹாசினி மணிரத்னம், பார்த்திபனை நடிக்க வைக்க அவரை அணுகினாராம்.

அதற்கு பார்த்திபன், “நான் நிச்சயம் நடிக்கிறேன். ஆனால் மணிரத்னம் அந்த எபிசோட்டை இயக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டாராம். மணிரத்னமும் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த எபிசோட்டை இயக்கித் தந்தாராம்.