இளம் நடிகர்
நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமாக உருவாகிக்கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் கூடியதாகவும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “குடும்பஸ்தன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

காலா பட வாய்ப்பு
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “காலா” திரைப்படத்தில் மணிகண்டன் லெனின் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரஜினிகாந்தின் மகன் கதாபாத்திரமாகும். ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த செய்தியை தனது பெற்றோரிடம் கூற உற்சாக மிகுதியில் வீட்டிற்கு சென்றாராம் மணிகண்டன்.

அவரது தாயாரிடம், “ரஜினிகாந்தோடு நான் நடிக்கபோகிறேன்” என கூற, அதற்கு அவரது தாயார், “அதெல்லாம் தேவை இல்லை, ரசம் இருக்கு, சாம்பார் வைக்கணுமா வேணாமா? அதை மட்டும் சொல்லு” என்றாராம். அதன் பின் தனது தந்தையிடமாவது இந்த விஷயத்தை கூறலாம் என்று நினைத்தாராம்.
தந்தை அவரது அறையில் தூங்கிக்கொண்டிருந்தாராம். கதவை தட்டிய பின் கதவை திறந்த அவரது தந்தை “என்ன விஷயம்?” என்று கேட்க, அதற்கு மணிகண்டன், “ரஜினி சார் படம்” என்று கூற எத்தனிக்கும்போதே கதவை பூட்டிவிட்டு மறுபடியும் தூங்கப்போய்விட்டாராம்.