மிமிக்ரியில் கலக்கும் மணிகண்டன்
மணிகண்டன் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்று. அதே போல் அவர் பிற நடிகர்களை போன்ற குரலில் மிமிக்ரி செய்யும் கலையில் கைத்தேர்ந்தவர். அஜித், ரஜினிகாந்த், டெல்லி கணேஷ் ஆகியோரின் குரல்களின் அவர் பேசுவது மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த நிலையில் சமீபத்தில் சாய் வித் சித்ரா பேட்டியில் கலந்துகொண்ட மணிகண்டன், தான் பின்னணி குரல் கொடுத்த நடிகர்களை குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

கமல்ஹாசனுக்கு டப்பிங்…

“டிஸ்கவரி சேன்னலில் இந்தியன் டெலிவிசன் புரொடக்சன் குறித்து ஒரு Documentary வந்தது. அதில் கமல்ஹாசனுக்கும் ஷாருக்கானுக்கும் நான் தமிழில் பின்னணி குரல் கொடுத்தேன். அதன் பின் பல ரஜினி திரைப்படங்களில் வசனம் எதுவும் விடுபட்டுப்போனால், ரஜினிகாந்த் பிசியாக இருக்கும் சமயத்தில் என்னை பேச அழைப்பார்கள். இது தவிர பல முன்னணி நடிகர்களுக்கு பல திரைப்படங்களில் வசனங்கள் விடுபட்டுப்போகும் பட்சத்தில் நான் பின்னணி குரல் கொடுத்திருக்கிறேன்” என்ற ஆச்சரிய தகவலை அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் மணிகண்டன்.