கும்பமேளா வைரல் பெண்
சமீபத்தில் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வின் போது இந்தூரைச் சேர்ந்த மோனலிசா என்ற 16 வயது பெண்ணின் புகைப்படம் வைரல் ஆனது. இப்பெண் கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்று வந்தவர். இவரது அழகான புகைப்படம் இணையத்தில் தீயாக பரவ இவரை பார்ப்பதற்காகவே கும்பமேளாவில் ஒரு தனிக்கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தின் தொந்தரவால் இப்பெண்ணுக்கும் அவரது குடும்பத்திற்கும் கூட பல சங்கடங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

தேடி வந்த பாலிவுட் பட வாய்ப்பு!
இந்த நிலையில் சனோஜ் மிர்சா என்ற பாலிவுட் இயக்குனர் மோனலிசாவை தனது புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார். இத்திரைப்படத்திற்கு “The Diary of Manipur” என்று டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குனர். இவ்வாறு சமூக வலைத்தளங்களின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயின் வாய்ப்பை தட்டிச் சென்றுள்ளார் மோனலிசா.