என்னைக்கும் விடாமுயற்சி….
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நேற்று வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தாலும் அஜித்குமாரின் கெரியரில் மிகவும் வித்தியாசமான திரைப்படமாக அமைந்துள்ளது.
வழக்கமான அஜித்குமாரின் திரைப்படமாக அல்லாது எந்த மாஸ் காட்சிகளும் இல்லாத கதையின் நாயகனாக நடித்திருந்தார் அஜித்குமார். ஆதலால் அஜித் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் திருப்தியளிக்கவில்லை.

மோர்கன் ஆண்டனி என்ற மகிழ் திருமேனி
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்தை இயக்கிய மகிழ் திருமேனியின் உண்மையான பெயர் கொண்ட டைட்டில் கார்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மகிழ் திருமேனி தனது கெரியரின் ஆரம்பக் கட்டத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அந்த வகையில் அவர் “வேட்டையாடு விளையாடு”, “பச்சைக்கிளி முத்துச்சரம்” போன்ற கௌதம் மேனன் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் “வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தின் டைட்டில் கார்டில் இணை இயக்குனர்கள் என்பதன் கீழ் மோர்கன் ஆண்டனி என்பவரது பெயர் இடம்பெற்றிருந்த Screenshot இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த மோர்கன் ஆண்டனிதான் மகிழ் திருமேனி என்று தனது பெயரை பின்னாளில் மாற்றிக்கொண்டார்.