துபாயில் செட்டில் ஆன மாதவன்
தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகரான மாதவன் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் துபாயில் குடியேறினார். மாதவனின் மகனான வேதாந்த் பல சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற மிகத் திறமையான நீச்சல் வீரர் ஆவார். வேதாந்தின் ஒலிம்பிக் பயிற்சிக்கு உதவும் வகையில் தனது குடும்பத்துடன் துபாய்க்கு குடியேறினார் மாதவன்.

நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
மாதவன், நயன்தாரா ஆகியோர் “டெஸ்ட்” என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இதனிடையே நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினரும் மாதவன்-சரிட்டா தம்பியினரும் இணைந்து 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாடினர். இரண்டு ஜோடிகளும் துபாயில் உள்ள ஒரு நீர்வெளியில் ஒரு சொகுசு படகின் மேல் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

சொகுசு படகின் விலை
இந்த நிலையில் இப்புகைப்படத்தில் இடம்பெற்ற சொகுசு படகு மாதவன் சொந்தமாக விலைக்கு வாங்கிய படகு என தெரிய வந்துள்ளது. அதாவது இந்த சொகுசு படகை எழுத்துப்பணிக்காக 14 கோடி ரூபாய் செலவில் மாதவன் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.