ஆச்சரியத்தில் மூழ்கடித்த மதகஜராஜா
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் உட்பட பலரது நடிப்பில் 2012 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் “மதகஜராஜா”. இத்திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிறுவனம் மிகப் பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கியதால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருந்தது.

இந்த நிலையில்தான் திடீரென இத்திரைப்படம் 12 வருடங்கள் கழித்து தற்போது பொங்கலுக்கு வெளிவந்துள்ளது. ஆச்சரியம் ஆனால் உண்மை! என்பது போல் இத்திரைப்படம் பொங்கல் ரேஸில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 12 வருடங்கள் கழித்து வெளிவந்துள்ள ஒரு திரைப்படம் இப்போதும் புதிய திரைப்படமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் சந்தானம் இடம்பெறும் காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
கலெக்சனில் பட்டையை கிளப்பும் மதகஜராஜா

இவ்வாறு தமிழ் சினிமாத் துறையையே ஆச்சரியத்தில் மூழ்கடித்த “மதகஜராஜா” திரைப்படம் கடந்த 12 ஆம் தேதி வெளியான நிலையில் கடந்த 3 நாட்களில் உலகளவில் ரூ.13 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.15 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்னும் சில நாட்களில் இத்திரைப்படம் ரூ.15 கோடி வசூலையும் தாண்டி நல்ல லாபத்தை குவிக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.