விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இடையில் சில காரணங்களால் இத்திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக வதந்தி பரவியது. மேலும் அஜித்குமார் இடையில் பல நாடுகளுக்கு பைக்கில் பயணம் செய்ததால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு என்ன ஆனது என்ற கேள்வியுடன் ரசிகர்கள் பலரும் சோகத்தோடு வலம் வந்தனர். எனினும் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது போல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்காக தயாராக உள்ளது.

புரொமோஷனில் மந்தம்
இந்த நிலையில் லைகா நிறுவனம் “விடாமுயற்சி” திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் மந்தம் காட்டுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. “விடாமுயற்சி” திரைப்படம் Pan India திரைப்படமாக வெளிவரவுள்ள நிலையில் மற்ற மொழிகளில் இத்திரைப்படத்திற்கு என்ன டைட்டில் என்பதை இப்போது வரை லைகா நிறுவனம் தெரிவிக்கவில்லை. மேலும் இன்னும் புரொமோஷன் பணிகளை துவங்குவதில் லைகா நிறுவனம் மந்தம் காட்டுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. “வேட்டையன்” திரைப்படத்திற்கும் லைகா நிறுவனம் இதே போல் புரொமோஷன் பணிகளில் மந்தமாக இருந்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.