LIK
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “Love Insurance Kompany”. இத்திரைப்படத்தை நயன்தாராவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமாரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் சில நாட்களாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக முடங்கிப்போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விக்னேஷ் சிவனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே…..
இத்திரைப்படத்தை நயன்தாரா தயாரித்து வந்தாலும் அவர் இத்திரைப்படத்தை First Copy Basis என்ற அடிப்படையில் தயாரித்து வருகிறார். அதாவது இத்திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு பணம் கொடுப்பவர் லலித்குமார்தான். எனினும் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களின் சம்பளத்தை நயன்தாரா நிர்வகித்துக் கொள்வார்.

இத்திரைப்படம் தொடங்கப்பட்டபோது மார்க்கெட் நிலவரம் ஓரளவு சாதகமாகவே இருந்ததாம். ஆதலால் விக்னேஷ் சிவன் கூறிய பட்ஜெட் தொகைக்கு இத்திரைப்படத்தை தயாரிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் பல ஓடிடி நிறுவனங்கள் திரைப்படங்களை வாங்குவதில் சில புதிய நிபந்தனைகளை அமல்படுத்தியுள்ளதால் தற்போது “LIK” திரைப்படத்தின் பட்ஜெட்டை குறைத்துக்கொள்ளும்படி லலித்குமார் கூறியுள்ளாராம். இதற்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களாம். இதனால் இவர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட “LIK” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.