Most Wanted Director
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் Most Wanted இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் “கைதி 2” திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. “கைதி 2” திரைப்படம் LCU-வுக்குள் இடம்பெறப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி?
ஹெச்.வினோத் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிப்பில் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்ததாம். ஆனால் அதற்குள் ஹெச்.வினோத் விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படத்தில் பிசியாகி விட்டார். இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித்குமார், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சி செய்து வருகிறாராம்.

“கைதி 2” திரைப்படத்திற்குப் பிறகு இந்த புராஜெக்ட் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் “கைதி 2” திரைப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் பிரபாஸை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.