நடிகை கீர்த்தி பாண்டியன்:
தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்து வரும் அருண்பாண்டியன் மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளிவந்த தும்பா என்ற திரைப்படத்தில் நடித்ததத்தின் மூலமாக தமிழ் சினிமா ஹீரோயினாக அறிமுகமானார்.
அதை அடுத்து தன்னுடைய தந்தை அருண்பாண்டியனுடன் சேர்ந்து அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கீர்த்தி பாண்டியன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். காரணம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
கல்யாணம் ஆனதும் நிம்மதி இல்ல?
இதனுடையயே அவர் பிரபல ஹீரோவான அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அசோக் செல்வனுடன் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். இந்த இந்நிலையில் சமீபத்திய விருது விழா நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி பாண்டியனிடம் ஆங்கர் பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை போராகிவிடும்.
கல்யாணமானதும் வாழ்க்கை நிம்மதியாகவே இல்லை. சிங்கிள் வாழ்க்கை சிங்கிள் வாழ்க்கை சிறப்பானது என்றெல்லாம் பல பேர் கூறுவார்கள். நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? உங்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது? என கேள்வி எழுப்பியதற்கு… பொதுவா அப்படி தான் சொல்லுவாங்க.
ஆனால், திருமண வாழ்க்கையில் நிறைய Fun இருக்கு என்று கீர்த்தி பாண்டியன் பதிலளித்தார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும்… அசோக் செல்வன் மாதிரி ஒரு கணவர் கிடைத்தால் எல்லாருக்கும் வாழ்க்கை செமயா ஜாலியா தான் இருக்கும் என கூறி வருகிறார்கள்.