ஆஸ்கர் 2025
2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1929 ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் அமெரிக்கர்களால் நடத்தப்படும் இந்த விருது உலகளவில் மிகவும் கௌரவமான விருதாக பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்தியாவில் இருந்து இயக்குனர் சத்யஜித்ரே, ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா, இசை வடிவமைப்பாளர் ரெசுல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ், இயக்குனர் கர்திகி கோன்ஸால்வஸ், தயாரிப்பாளர் குனித் மோங்கா ஆகியோர் ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறார்கள்.
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
தற்போது இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு அனிமேஷன் திரைப்படம் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது. லத்வியா நாட்டைச் சேர்ந்த “Flow” என்ற சுயாதீன அனிமேஷன் திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

“Flow” திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியானது. ஒரு பூனையை மையப்படுத்தி நகரும் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் இந்திய திரைப்பட ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இத்திரைப்படம் தற்போது ஆஸ்கர் வாங்கியுள்ள செய்தி இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.