சர்ச்சைகள் சூழ்ந்த நடிகை
வாடகைத் தாய் விவகாரத்தில் இருந்து தற்போது தனுஷ் விவகாரம் வரை நயன்தாரா பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கூடுதலாக சமீபத்தில் ஒரு விழாவுக்கு தாமதமாக வந்த நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் அங்கிருந்த மக்கள் கேள்வி எழுப்ப, அப்போது ஒருவர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தரப்பு நியாயத்தை கூறும் வகையில், “அவர்கள் நார்மல் மனிதர்கள் அல்ல” என்று பேசியது சமூக வலைத்தளங்களில் டிரோல் மெட்டீரியலாக ஆகியது.

தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த நயன்தாரா!
இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரை நயன்தாரா தனது செயலால் கதிகலங்க வைத்துள்ளாராம். விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கி வரும் திரைப்படம் “LIK”. இத்திரைப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது திட்டமிடப்பட்ட பட்ஜெட், காலப்போக்கில் அதிகமான நிலையில் லலித்குமார் இதற்கு மேல் பணம் தர முடியாது என கூற, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டாதாக கூறப்பட்டது.

இதனிடையே லலித்குமார் நயன்தாராவையும் கவினையும் வைத்து “ஹாய்” என்று ஒரு புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன், லலித்குமாரிடம், “ஹாய் திரைப்படத்திற்காக நயன்தாராவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை எனக்கு தாருங்கள். அந்த பணத்தை வைத்து LIK படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுகிறேன்” என கூறினாராம். இது நல்ல யோசனையாக இருக்கிறது என நினைத்த லலித்குமார் விக்னேஷ் சிவனின் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டு “ஹாய்” திரைப்படத்திற்காக நயன்தாராவிற்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை விக்னேஷ் சிவனிடம் தந்திருக்கிறார். அதனை தொடர்ந்து “LIK” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
ஆனால் தற்போது “ஹாய்” திரைப்படத்திற்கு நயன்தாரா கால்ஷீட் தராமல் இழுத்தடித்துக்கொண்டு வருகிறாராம். இதனால் லலித்குமார் கதிகலங்கிப்போய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.