வசூலில் சாதனை
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “புஷ்பா 2”. இத்திரைப்படம் இன்றோடு ரூ.1500 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக அல்லு அர்ஜூன் சேலை கட்டி நடனம் ஆடும் காட்சிகள் Goosebumps ஆக இருந்ததாக திரைப்படம் பார்த்தவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தியேட்டரில் சாமியாடிய ரசிகை
இந்த நிலையில் நடிகையும் பிக் பாஸ் பிரபலமும் ஆன சம்யுக்தா “புஷ்பா 2” திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது அல்லு அர்ஜூன் சேலை கட்டி நடனமாடும் காட்சியை திரையில் கண்டவுடன் சம்யுக்தாக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவருக்கு சாமி வந்துவிட்டதாம்.

அந்த பெண்மணியை அவரது கணவர் கட்டுபடுத்த முயல, சம்யுக்தாவோ பயந்துபோய் திரையரங்கத்தின் முன் இருக்கையில் ஓடிச்சென்று அமர்ந்துவிட்டாராம். இந்த சம்பவத்தை தனது “X” தளத்தில் பகிர்ந்துள்ளார் சம்யுக்தா.
So we went to watch Pushpa 2 yesterday at Pheonix mall.. when Pushpa started dancing in the saree , the lady next to us got ‘swami’(Possessed), started swaying and rolled her tongue , and her husband had to restrain her. We got terrified and moved to Rs 10 (front) seat. ?
— Samyuktha Shanmughanathan (@samyuktha_shan) December 16, 2024