மாஸ் ஹிட்
“L2 எம்புரான்” திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமுடு, டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் இதே கூட்டணியில் இதற்கு முன் உருவான “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இத்திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்திய ஆக்சன் திரைப்படமாகும். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
வசனங்களை Mute செய்ய முடிவு!
அதாவது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சைக்குரிய வசனங்களை Mute செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். மேலும் 17 இடங்களில் சில காட்சிகளை நீக்கவும் முடிவெடுத்துள்ளனராம். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக உள்ளதாக சர்ச்சை கிளம்பிய நிலையில் இம்முடிவு என கூறப்படுகிறது.