ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சொந்த ஊராக கொண்ட நடிகை கிரண் ரதோட் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக பெயர் எடுத்தார் .
தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கிரண் ரதோட் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தின் மூலமாக கடந்த 2002 ஆம் ஆண்டு நடித்த திரையுலகில் அறிமுகம் ஆனார்.
முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றி அவருக்கு தேடி தந்தது. அதையடுத்து வில்லன், அன்பே சிவம், திவான், வின்னர், தென்னவன் ,திருமலை, நியூ ,திமிரு, வசூல், நாளை நமதே, ஜக்குபாய், உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
இவர் 2000 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இதனிடையே நடிகை கிரண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அதன் பின் அந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டதால் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தும் அவரால் நடிக்க முடியாமல் போனதாம்.
காதல் தோல்வியால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட கிரண் ரதோட் பட வாய்ப்புகளை தவறவிட்டார். பின்னர் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் பட வாய்ப்புகள் எல்லாம் போய்விட்டது.
மார்க்கெட்டும் சரிந்து விட்டது என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்ட கிரண் ரதோட் குரு சிஷ்யன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் .
அதை எடுத்து சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கிரண் ரதோட் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தனது சமூக வலைத்தளமான Instagram முழுக்க படு கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணத்தையும் சம்பாதித்து வருகிறார் .
இந்நிலையில் தற்போது கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்திருக்கும் அவருக்கு அந்த கவர்ச்சி தான் பணமும் சம்பாதித்து கொடுக்கிறது .
ஆம் கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில நேரம் அவர் பதிவிடும் போட்டோக்களை பார்த்தால் நெட்டிசன்ஸ் தர்ம சங்கடமாக இருப்பதாக அவரை பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள் .
ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்பட கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் நெட்டிசன்ஸ் இன்ஸ்டாக்ராமுக்கு சென்சார் எதுவும் இல்லையாப்பா என கதறுகிறார்கள்.