கைதி 2
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தற்போது லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார். LCU என்ற Lokesh Cinematic Universe-ஐ உருவாக்கி தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டை உருவாக்கியவர் இவர். தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக “கைதி 2” திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. “கைதி 2” திரைப்படம் LCU-க்குள் அடங்குகிறது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

கிச்சா சுதீப்
கன்னட நடிகரான கிச்சா சுதீப் “நான் ஈ” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் தற்போது “மேக்ஸ்” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கிறுஸ்துமஸ் தினத்தன்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோ ஒன்றில் “மேக்ஸ்” திரைப்படத்தை குறித்து பேசியுள்ளார். அதில், “கைதி திரைப்படம் போலவே ஒரே இரவில் காவல் நிலையத்தில் நடக்கும் சம்பவத்தை வைத்து இத்திரைப்படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். நிச்சயமாக இது லோகேஷ் கனகராஜ்ஜிற்கு நெருக்கடியை கொடுக்கும். கைதி 2 திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வை மேக்ஸ் திரைப்படம் தருகிறது” என அவர் கூறியுள்ளார்.