டாப் நடிகை
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பல நாள் காதலனை கரம் பிடித்தார். அதனை தொடர்ந்து பல விழாக்களுக்கு புதிதாக கட்டிய தாலியுடனே வலம் வந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் “பேபி ஜான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். தமிழில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த “தெறி” திரைப்படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம். இத்திரைப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ளார்.

தமிழ் சொல்லிக்கொடுத்த கீர்த்தி
இந்த நிலையில் “பேபி ஜான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வருண் தவானுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளை சொல்லிக்கொடுக்கும் வீடியோ ஒன்றை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.