கீர்த்தி சுரேஷ் திருமணம்
கடந்த 12 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் தான் பல காலமாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை கரம் பிடித்தார். இத்திருமண நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். கீர்த்தி சுரேஷும் விஜய்யும் பல ஆண்டுகளாக நண்பர்களாக பயணித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய், கீர்த்தி சுரேஷ் திருமண வைபோகத்தில் கலந்துகொண்டார்.
விஜய்யுடன் தம்பதிகள்
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது “X” தளத்தில் திருமண கோலத்தில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “கியூட் புகைப்படம்” என அப்புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

