நடிகை கீர்த்தி சுரேஷ்:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்தும் அவரது காதல் குறித்தும் வதந்திகளாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அனிருத் – கீர்த்தி சுரேஷ் காதல்:
ஆனால் அது எதுவும் உண்மை இல்லை என்பதை அவரும் அவரது பெற்றோர்களும் கூறினார்கள். தற்போது 32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கிறது. ஆம், மாப்பிளை யார் என்று கேட்பீர்களானால்…..இந்திய அளவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்து வரும் அனிருத் தானாம்.
டிசம்பரில் திருமணம்:
அனிருத் கீர்த்தி – சுரேஷ் இருவரும் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போது வதந்தி வைரல் ஆகி வருகிறது. இளம் இசையமைப்பாளரான அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று…தற்போது ரஜினிகாந்தின் கூலி , அஜித்தின் விடாமுயற்சி, விஜய்யின் தளபதி 69 உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.