நடிகையின் விதி…
தமிழ் சினிமாவை பொறுத்தவரை புகழின் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் திருமணம் செய்துகொண்டால் அவரின் கெரியருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் புகழின் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகை திருமணம் செய்துகொண்டால் அந்த நடிகையின் கெரியர் சற்று பிரச்சனைக்குள்ளாகிறது.

இந்த போக்கு தமிழ் சினிமாவில் காலாகாலமாக இருக்கும் ஒன்று. இந்த எழுதப்படாத விதிதான் கீர்த்தி சுரேஷின்ன் கெரியரை சற்று ஆட்டம் காண வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
காதல் திருமணம்
கீர்த்தி சுரேஷ் தனது பல நாள் காதலரை சமீபத்தில் கரம் பிடித்தார். இத்திருமணத்திற்கு முன்பு அவர் “பேபி ஜான்” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு திருமணம் ஆன பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். அவருக்கு திருமணமாகியுள்ள நிலையில் அவருக்கு இப்படி ஒரு நிலையா என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.