கீர்த்தி சுரேஷ் திருமணம்
கீர்த்தி சுரேஷிற்கும் அவரது பல நாள் காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த 12 ஆம் தேதி கோவாவில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் விஜய், திரிஷா என திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் “பேபி ஜான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கிருஸ்துமஸை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இயக்குனர் அட்லீ தயாரித்துள்ள இத்திரைப்படம் தமிழில் விஜய் நடித்த “தெறி” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
மார்டன் உடை, கழுத்தில் தாலி
இந்த நிலையில் “பேபி ஜான்” திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், சிகப்பு நிற கவர்ச்சியான உடையில் கழுத்தில் புதிதாக கட்டிய தாலியுடன் தென்பட்டார். மார்டன் உடையில் கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலியுடன் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அப்புகைப்படங்களை மெய்மறந்து ரசித்து வருகின்றனர்.


