காதலரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ்
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நெடுநாள் காதலரை கரம் பிடித்தார். இவர்களது திருமண நிகழ்வு கோவாவில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் பல விழாக்களில் மார்டன் உடையணிந்து கழுத்தில் புதிதாக கட்டிய தாலியுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

பேபி ஜான்
இதனிடையே கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் “பேபி ஜான்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். தமிழில் அட்லீ இயக்கிய “தெறி” திரைப்படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம். இத்திரைப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள நிலையில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் “பேபி ஜான்” திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் கழுத்தில் புதிதாக கட்டிய தாலியுடன் சல்மான் கான் முன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் மார்டன் உடையில் தென்படுகிறார்.
#KeerthySuresh in her extrovert mode ?
— Akshay (@Filmophile_Man) December 22, 2024
Nice to see her dancing with #SalmanKhan ???#BiggBoss18#BabyJohn #VarunDhawan @KeerthyOfficial
pic.twitter.com/EczQqsYzR3