கீர்த்தி சுரேஷ் காதலர்:
கடந்த சில நாட்களாக கீர்த்தி சுரேஷின் காதலர் குறித்தும் அவரது திருமணம் குறித்தும் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் அவருக்கு திருமணம் கோவாவில் நடக்கலாம் என்ற பேச்சுக்கள் வெளியாகி செய்தியாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவரது காதலர் ஆன்டனி தட்டில் என்பவர் தான் என்பது உறுதியாகி இருக்கிறது. அதாவது 15 வருட காதல் என்று கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே ஆண்டனியை காதலித்து வந்தாராம். இத்தனை வருட காதலை கீர்த்தி சுரேஷ் இவ்வளவு நாட்கள் ரகசியமாக மறைத்து வைத்திருந்தார் என கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்து விட்டார்கள் .
யார் அந்த ஆண்டனி தட்டில்?

இந்த நிலையில் தற்போது யார் அந்த ஆண்டனி தட்டில்? என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள். ஆண்டனி துபாயில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார் .மேலும் அவர்கள் குடும்பத்தினர் பாஜகவில் இருப்பதாக கூறப்படுகிறது .
ஆனால் அவருக்கு துபாயில் மட்டும் தொழில்கள் இல்லையாம்… சென்னையிலும் அவருக்கு இரண்டு கம்பெனிகள் சொந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. தன்னை பற்றி எந்த ஒரு விவரத்தையும் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வாராம் ஆண்டனி . அவர் ஒரு இன்ஜினியர் என்று கூறப்படுகிறது.
பல கோடி சொத்துக்கு அதிபதி:

கொச்சியில் ஏகப்பட்ட ரெஸ்டாரண்டுகளை நடத்தி வருகிறாராம். சொந்தமாக பல சொகுசு கார்கள் வைத்திருக்கிறாராம். மேலும், பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் அவர் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக சமீபத்திய லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கிறது. எனவே கீர்த்தி சுரேஷின் ரகசிய காதலர்? இந்த ஆண்டனி தானா? என்பது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. விரைவில் அவரது திருமணம் குறித்த தகவலும் கசியும் என கூறுகிறார்கள்.