கீர்த்தி சுரேஷ் – ராஷ்மிகா:
தென் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா இருவரும் தனது தோழி ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அந்த திருமணத்தில் நடிகை ராஷ்மிகா அழகாக லட்சணமான சேலை அணிந்து கிளாமரே காட்டாமல் மிகவும் ஹோமிலியான லுக்கில் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ராஷ்மிகாவை பலரும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.
கல்யாணத்துக்கு இப்படியா உடை அணிவது?
ஆனால், கீர்த்தி சுரேஷ் அப்படியே அதற்கு மாறாக கிளாமரான ஆடையில் தன்னுடைய உடல் அழகை காட்டி செம கிளாமர் ஆக போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் பலரும் திருமணத்திற்கு இப்படியா ஆடை அணிந்து செல்வது? இது ஒன்னும் படத்தின் ஷூட்டிங் இல்லை….பாடல் காட்சி போல உடை அணிந்து வந்து இப்படி மோசமான விமர்சனத்திற்கு ஆளாகாதீர்கள் என்றெல்லாம் கீர்த்தி சுரேஷை விமர்சித்து வருகிறார்கள்.