இளம் கனவுக்கன்னி
“டிராகன்” திரைப்படம் வெளிவந்ததில் இருந்து அத்திரைப்படத்தில் நடித்த கயது லோஹரை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஆண்களின் மத்தியில் கனவுக்கன்னியாகவே கயது லோஹர் வலம் வருகிறார்.

கயது லோஹர் தமிழில் அறிமுகமான திரைப்படம் “டிராகன்” என்றாலும் அவர் தமிழில் முதன்முதலில் ஒப்பந்தமான திரைப்படம் “இதயம் முரளி” என்று அவரே கூறியிருந்தார். “இதயம் முரளி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கயதுவை தவறவிட்ட ராகவா லாரன்ஸ்
ஆனால் கயது லோஹர் “இதயம் முரளி” திரைப்படத்திற்கு முன்பே ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது ராகவா லாரன்ஸ் தான் இயக்கவிருந்த ஒரு திரைப்படத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு கயது லோஹரை ஒப்பந்தம் செய்திருந்தாராம்.

ஆனால் எக்காரணத்தாலோ அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லையாம். இரண்டு ஆண்டுகள் கழித்து கயது லோஹரின் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் அதன் பிறகுதான் “இதயம் முரளி”, “டிராகன்” ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமானாராம் கயாது. ஒரு வேளை ராகவா லாரன்ஸ் அத்திரைப்படத்தை இயக்கியிருந்தார் கயது லோஹரை அறிமுகப்படுத்திய இயக்குனர் என்ற பெயரை ராகவா லாரன்ஸ் தனதாக்கிக்கொண்டிருப்பார்.