இளம் கதாநாயகன்
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களே பல காலமாக கோலோச்சிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மணிகண்டன், கவின் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது.

குறிப்பாக “டாடா” திரைப்படத்தின் வெற்றி கவினின் கெரியருக்கு திருப்புமுனையான வெற்றியாக அமைந்துள்ளது. அதற்கு முன் அவர் கதாநாயகனாக “நட்புனா என்னனு தெரியுமா?”, “லிஃப்ட்” போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் “டாடா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
Flop ஆன படங்கள்
எனினும் “டாடா” திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடித்த “ ஸ்டார்”, “பிளடி பெக்கர்” போன்ற திரைப்படங்கள் சரியாக போகவில்லை. இதில் “ஸ்டார்” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியானது, ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

கவின் தற்போது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் “கிஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிப்பதாக முதலில் முடிவெடுக்கப்பட்டதாம். ஆனால் கவினின் முந்தைய இரண்டு திரைப்படங்கள் பெரிதளவில் ஓடவில்லை என்ற காரணத்தில் “கிஸ்” திரைப்படத்தின் பட்ஜெட்டை குறைத்துவிட்டார்களாம். இவ்வாறு வெளியான தகவல் கவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.