நடிகர் தனுஷ் – நயன்தாரா விவகாரம்:
நடிகர் தனுஷ் தன்னுடைய திருமண வீடியோவை வெளியிடுவதற்கு பெரும் தொல்லை கொடுத்து வருவதாகவும் அந்த வீடியோவை வெளியிட கிட்டத்தட்ட ரூபாய் 10 கோடி வரைக்கும் பணம் கேட்பதாகவும் நயன்தாரா பகிரங்கமாக புகார் கூறியிருந்தார்.

இந்த விஷயம் கோலிவுட் சினிமாவில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கை கொடுத்ததே தனுஷ் தான். அப்படி இருக்கும்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு நன்றி கெட்டவராக மாறிவிட்டார் என்றெல்லாம் விக்னேஷ் சிவனை மோசமாக நெட்டிசன்ஸ் விமர்சித்து தள்ளி இருந்தார்கள் .
உதவி செய்த தனுஷ்:
விஐபி திரைப்படத்தில் பணியாற்றிய விக்னேஷ் சிவனுக்கு உதவி செய்ய நினைத்த தனுஷ் நானும் ரவுடிதான் திரைப்படத்தை தயாரித்தார். ஆனால் நயன்தாராவை இம்ப்ரஸ் செய்யவே தொடர்ந்து விக்னேஷ் சிவன் நானும் ரௌடி தான் திரைப்படத்தில் பணியாற்றி வந்திருக்கிறார் .

இதை பார்த்து கடுப்பான தனுஷ் உங்கள் காதலுக்கெல்லாம் என்னால் பணத்தை போட்டு படம் எடுக்க முடியாது எனக்கூறி படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிவிட்டார். அப்போது ஏற்பட்ட மன கசப்பு தொடர்ந்து 9 வருடங்களாக நீடிப்பதாக நயன்தாரா கூறியிருந்தார்.
முதுகில் குத்திய நயன்தாரா:
இப்படியாக தனுஷ் செய்த நன்றியை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவருமே மறந்து விட்டதாக தனுஷின் ரசிகர்கள் அவர்களை மோசமாக திட்டி தீர்த்து வருகிறார்கள். இப்படியான சமயத்தில் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர் எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் பற்றி எங்களுக்கு கவலையே இல்லை .

எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது. நயன்தாரா சொன்னது போன்று இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது உண்மை இல்லை. இது குறித்து மேலும் பேச நான் விரும்பவும் இல்லை. என் மகனும் நானும் இப்போது வேலையில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்துகிறோம். தயவு செய்து இது போன்ற விஷயங்களை இத்தோடு நிறுத்தி விடுங்கள் என கஸ்தூரிராஜா அலட்சியப்படுத்தி நயன்தாராவை பேசி இருந்தார்.