கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதை!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்த “கேம் சேஞ்சர்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் ராம் சரணுக்கு ஹீரோயின்களாக கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கதை எழுதியவர் கார்த்திக் சுப்புராஜ்.

கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், லிங்குசாமி என பல இயக்குனர்கள் ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் உரையாடியபோது கார்த்திக் சுப்புராஜ் ஒரு ஒன்லைன் கூற அது ஷங்கருக்கு பிடித்துவிட்டது. அந்த ஒன்லைன் கதையாக உருவாக “கேம் சேஞ்சர்” திரைப்படமாக தற்போது வெளிவந்துள்ளது.
ஷங்கர் கதையை ஷங்கருக்கே விற்ற இயக்குனர்!
இந்த நிலையில் “கேம் சேஞ்சர்” திரைப்படத்தை விமர்சித்த வலைப்பேச்சு குழுவினர், “கேம் சேஞ்சர் திரைப்படத்தை பார்க்கும்போது ஷங்கரின் சிவாஜி, முதல்வன் போன்ற திரைப்படங்கள்தான் ஞாபகம் வருது. ஷங்கரின் பல திரைப்படங்களை தொகுத்து கார்த்திக் சுப்புராஜ் ஒன்றாக கதை எழுதியது போல் இருக்கிறது. கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல் ஷங்கர் கதையை எடுத்து ஷங்கருக்கே விற்றுவிட்டார் போல” என்று விமர்சித்துள்ளனர்.
