பிசியான நடிகர்
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கோலிவுட் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் நடிகராக கார்த்தி கவர்ந்திழுத்துள்ளார். தற்போது “வா வாத்தியார்”, “சர்தார் 2” போன்ற திரைப்படங்களில் கார்த்தி நடித்து வருகிறார்.
பெரிய பட்ஜெட் படம்
இந்த நிலையில் “டாணாக்காரன்” திரைப்படத்தை இயக்கிய தமிழுடன் அடுத்த திரைப்படத்தில் கார்த்தி இணையவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இத்திரைப்படம் வரலாறு சம்பந்தப்பட்ட திரைப்படம் எனவும் கார்த்தியின் கெரியரில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள திரைப்படம் எனவும் கூறப்படுகிறது. “டாணாக்காரன்” திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.