கார்த்தி-தமிழ் கூட்டணி
கார்த்தி தற்போது “சர்தார் 2”, “வா வாத்தியார்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து “டாணாக்காரன்” இயக்குனர் தமிழுடன் இணையவுள்ளார் கார்த்தி. 1960களின் கடற்கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட கதையம்சத்தில் உருவாகவுள்ள வரலாற்று புனைவு திரைப்படம் இது. ஆதலால் இராமேஸ்வரத்தில் இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்க உள்ளனராம்.

ராமேஸ்வரத்தையே ஆக்கிரமித்த படக்குழு
இந்த நிலையில் இராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல தங்கும் விடுதிகளில் படக்குழுவினர் அறை எடுத்துள்ளனராம். கிட்டத்தட்ட 450 பேர் இத்திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனராம். 4 மாதங்கள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. கார்த்தி படக்குழுவினர் இராமேஸ்வரத்தில் உள்ள பல தங்கும் விடுதிகளில் 4 மாதங்களுக்கு அறை வாடகை எடுத்துள்ளதால் இராமேஸ்வரத்திற்கு தரிசிக்க பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.