கங்குவா படுதோல்வி:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பு கடையில் வெளிவந்த திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் பலகோடி பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் செலவு செய்து படத்தை எடுத்தார்கள் .

ரூ. 200 கோடி வசூலை வாரி குவிக்கும் என்றெல்லாம் சூர்யா பேசியபோது கங்குவார் படத்தின் மீது பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் அது அப்படியே எதிர்மறையாக விமர்சனங்கள் வந்து விழுந்ததால் படம் படுதோல்வி அடைந்தது.
100 தடவை என்னத்த பார்த்தாங்க?
இதனால் போட்ட படத்தை கூட எடுக்க முடியாத நிலைக்கு சூர்யாவின் கங்குவா திரைப்படம் அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது. இப்படியான சமயத்தில் இது குறித்து பிரபல youtubeபரான பிஸ்மி பேட்டியில் கூறியிருப்பதாவது கங்குவா படத்தில் முதல் தடவை பார்த்தாலே காது ஜவ்வுனு கிழிந்து விடுகிறது. இந்த படத்தை மதன் கார்த்தி எப்படி 100 தடவை பார்த்தார் என்கிற கேள்விதான் எழுந்திருக்கிறது.

100 தடவை கூட படத்தை பார்த்துவிட்டு correction சொல்லவில்லையா? ரசிகர்கள் பார்த்தவுடனே இரண்டு பாயிண்ட் வேல்யூவுமே குறைக்க சொல்றாங்க. படத்தை இவர்கள் எத்தனை முறை பார்த்திருப்பார்கள் ஒருவருக்கும் சினிமா ஞானம் இல்லையா? இல்லை ரசிகர்கள் ஏமாற்றம் செய்த செய்யலா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் .
கதை தேர்வு செய்ய தெரியாத சூர்யா:
சிங்கம் படத்தில் நடித்து மாஸ் காட்டிய சூர்யா ஹரி டைரக்ஷனில் அருவா திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் பாலா இயக்கத்தில் நடித்து வந்த வணங்கா படத்தில் இருந்து விலகினார். சுதா கொங்கரா இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட புறநானுறு படத்தில் இருந்தும் விலகினார். இப்படி பல நல்ல திரைப்படங்களை விட்டு இப்படி ஒரு மோசமான கங்குவா திரைப்படத்தில் நடித்து தன் பெயரை கெடுத்துக்கொண்டார்.

பிரம்மாண்டமான படங்களில் நடித்து விட்டால் பான் இந்திய நடிகராக மாறிவிடலாம் என சூர்யா நினைப்பது முதல் மிகப்பெரிய தவறு. நல்ல கதை தான் முதலில் முக்கியம். கதையே இல்லாமல் பிஜிஎம் ஐ போட்டும் விஷுவல் எபெக்ட் செய்து காட்டியும் சண்டைக் காட்சிகளை வைத்து படம் இயக்கினால் அந்த ரிசல்ட் இப்படித்தான் இருக்கும் என்பதை இனியாவது ஹீரோக்கள் புரிந்துகொண்டு படங்களை செலக்ட் செய்ய வேண்டும் என பிஸ்மி அட்வைஸ் செய்திருக்கிறார் .
உலக மகா அசிங்கம்:
அது மட்டும் இல்லாமல் இந்தியன் 2 படத்தை விட்டுவிட்டு செய்துவிட்டு ரசிகர்கள் தற்போது கங்குவா படத்தை அட்மிட் செய்து அடி பொளந்து வருகிறார்கள். அதன்படி இந்தியன் 2 படத்திற்கு பிறகு அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படம் கங்குவா தான். அடுத்தது எந்த படம் சிக்க போகிறதோ என்ன மோசமாக கங்குவா படத்தை விமர்சித்து தள்ளி இருக்கிறார் பிஸ்மி.