சினிமாவுக்காக உயிரையே கொடுப்பவர்
உலக நாயகன் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக விளங்கி வந்த கமல்ஹாசன் தனது உயிரினும் மேலாக சினிமாவை விரும்புபவர். ஒரு கதாபாத்திரத்திற்கு இவர் செய்யும் மெனக்கடல் ஒவ்வொன்றும் ஆச்சரியம் ஏற்படுத்துபவை. எனினும் இனிமேல் தனது திரைப்படங்களில் “உலக நாயகன்” என்ற டைட்டிலை பயன்படுத்த வேண்டாம் என சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் ஒரு காட்சிக்காக உயிரை துச்சமென எண்ணி டூப் போடாமல் மாடியில் இருந்து குதித்த சம்பவத்தை குறித்துதான் நாம் பார்க்கப்போகிறோம்.

உயிரையே பணயம் வைத்த கமல்ஹாசன்
1981 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “டிக் டிக் டிக்”. இத்திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமாக ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மாடியில் இருந்து குதிப்பது போன்று ஒரு காட்சி அமைந்திருந்ததாம்.

அந்த காட்சியில் கமல்ஹாசன் டூப்பை நடிக்க வைக்க மறுத்துவிட்டாராம். தானே மாடியில் இருந்து குதித்தாராம். இந்த அர்ப்பணிப்புதான் அவரை உலக நாயகன் ஆக்கியிருக்கிறது என இதில் இருந்து தெரிய வருகிறது.