மய்யத்தில் சினேகன்
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர் சினேகன். 28 வருடங்கள் தமிழ் சினிமா இசை உலகில் பாடலாசிரியராக பயணத்தை நிகழ்த்தி வரும் சினேகன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினராகவும் வலம் வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சினேகன் 22,951 வாக்குகள் பெற்று 5 ஆவது இடத்தை பிடித்தார்.
கமல்ஹாசன் சூட்டிய வித்தியாசமான பெயர்கள்…

சினேகனும் சின்னத்திரை நடிகை கன்னிகா ரவியும் 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது இத்தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஒரு பெண் குழந்தைக்கு காதல் எனவும் மற்றொரு பெண் குழந்தைக்கு கவிதை எனவும் பெயர் சூட்டியுள்ளார் கமல்ஹாசன்.