90’ஸ் Kidகளின் ஃபேவரைட் திரைப்படம்
1989 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “அபூர்வ சகோதரர்கள்”. குட்டை கமல், நெட்டை கமல் என இரண்டு வேடங்களில் கமல்ஹாசன் அதகளம் செய்த திரைப்படம் இது. இத்திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தாலும் 90’ஸ் Kidகளின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக இது திகழ்கிறது. இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் இத்திரைப்படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசிப்பார்கள்.

எம்.ஜி.ஆர் பாட்டு மாதியே வேணும்….
“ஆபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. அவரது இசையில் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “புது மாப்பிள்ளைக்கு” என்ற பிரபலமான பாடல் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை இப்போது பார்க்கலாம்.

இத்திரைப்படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது கமல்ஹாசன், “அன்பே வா” படத்தில் இடம்பெற்ற “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்” என்ற பாடல் போலவே ஒரு பாடல் வேண்டும் என கேட்டாராம். அதற்கு இளையராஜா மெட்டமைத்த பாடல்தான் “புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா” என்ற பாடல். இரண்டு டியூன்களுமே ஒரே மாதிரியான டியூன்கள் என்று சமீபத்தில் நடந்த “அபூர்வ சிங்கீதம்” என்ற நிகழ்ச்சியில் அந்த இரண்டு பாடல்களை ஒப்பிட்டு பாடிகாட்டினார் இளையராஜா. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.