டெம்ப்ளேட் கதாபாத்திரம்
நடிகர் கலையரசன் “நந்தலாலா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும் “மெட்ராஸ்” திரைப்படம்தான் அவரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. “மெட்ராஸ்” திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த கலையரசனுக்கு “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் அவரது நடிப்பின் வேறு ஒரு பரிமாணத்தை காட்டியது. குறிப்பாக “வாழை” திரைப்படம் அவரது கெரியரில் சிறந்த திரைப்படமாக அமைந்தது.

எனினும் கலையரசன் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் கொல்லப்பட்டுவிடும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். “மெட்ராஸ்” திரைப்படத்தில் இருந்து “வாழை” திரைப்படம் வரை பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இனி நடிச்சா ஹீரோதான்…
இதனிடையே வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலையரசன் நடித்த “மெட்ராஸ்காரன்” திரைப்படம் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு பேசிய கலையரசன், “ஒரு கதாபாத்திரம் சாகவேண்டும் என்றால் அதை என் பெயரில் எழுதி விடுவார்கள் போல. இனிமேல் குறிப்பிட்ட சில கதைகளில் மட்டுமே துணை நடிகராக நடிக்கப்போகிறேன். மற்றபடி இனி நான் ஹீரோவாகத்தான் நடிக்கப்போகிறேன்” என ஆதங்கத்தில் கூறியுள்ளார்.