சிறந்த நடிகர்
தமிழ் சினிமா உலகில் சிறப்பான நடிகராக வலம் வந்தாலும் சிறப்பான வாய்ப்புகள் அமையாமல் போன நடிகர்களில் ஒருவர் விதார்த். “மைனா” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தாலும் அதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் கொண்டாடும்படி அமையவில்லை.

இப்போதும் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தாலும் இவரின் பெயர் சொல்லும்படியான எந்த திரைப்படமும் சமீபத்தில் வெளியாகவில்லை. ஆதலால் இவர் சிறந்த நடிகராக இருந்தாலும் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடவில்லை.
அரிய வாய்ப்பை Divert செய்த தாணு!
இந்த நிலையில் நடிகர் விதார்த்துக்கு வந்த அரிய வாய்ப்பு ஒன்றை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கன்னட நடிகரை நோக்கி திருப்பி விட்டிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் கார்த்திகேயா என்பவரின் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் கன்னடத்தில் வெளியான திரைப்படம் “மேக்ஸ்”.

முழுக்க முழுக்க அசரவைக்கும் ஆக்சன் காட்சிகளை உடைய ஒரு அசத்தலான வெற்றித்திரைப்படமாக “மேக்ஸ்” திரைப்படம் அமைந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் இயக்குனரான விஜய் கார்த்திகேயா இத்திரைப்படத்தின் கதையை விதார்த்தை மனதில் வைத்துத்தான் எழுதியிருந்தாராம். இந்த கதையை தயாரிப்பாளர் எஸ்.தாணுவிடம் கூறியபோது “இந்த கதை விதார்த்துக்காக எழுதப்பட்டது” என கூறியிருக்கிறார். ஆனால் தாணுவோ, “நான் கன்னட ஹீரோ சுதீப்பின் கால்ஷீட் வைத்திருக்கிறேன். அவரை வைத்து இத்திரைப்படத்தை எடுக்கலாம்” என கூறிவிட்டாராம். இவ்வாறு விதார்த்துக்கு வந்த ஒரு அரிய வாய்ப்பை கலைப்புலி எஸ்.தாணு தடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.