அழகோ அழகு
90’ஸ் Kidகளின் மனதை கொள்ளைக்கொண்ட கதாநாயகிகளில் ஒருவர் காஜல் அகர்வால். “பழனி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காஜல் அகர்வால், அதன் பின் தமிழின் டாப் நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் இவர் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படத்துறைகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இவ்வாறு இந்தியாவின் முக்கிய நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் காஜல்.
பார்வதி தேவி
இந்த நிலையில் “கண்ணப்பா” என்ற தெலுங்கு திரைப்படத்தில் கடவுள் சிவனுக்கு ஜோடியாக பார்வதி தேவியாக நடிக்க உள்ளார் காஜல் அகர்வால். இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள காஜல் அகர்வால், “என்னுடைய கனவு கதாபாத்திரம் இது. நான் மிகவும் ஆவலோடு இருக்கிறேன்” என தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

“கண்ணப்பா” திரைப்படம் கண்ணப்ப நாயனரின் கதையை வைத்து உருவாகவுள்ள திரைப்படமாகும். இத்திரைப்படம் பேன் இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இத்திரைப்படத்தி சிவபெருமானாக அக்சய் குமார் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
My dream role indeed. Super excited for this one. @iVishnuManchu #Kannappa @akshaykumar ? pic.twitter.com/1nnWQTGwBD
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) January 6, 2025